ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:25 IST)

வாரிசு, துணிவு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதா? திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

Thunivu
பொங்கல் பண்டிகையொட்டி ரிலீஸ் ஆகவுள்ள  வாரிசு, துணிவு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த வதந்திகளுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களின் இருவரின் படங்களும் 8 ஆண்டுகளுக்குப்பின்  பொங்கல் பண்டிக்குக்கு நேரடியாக மோதவுள்ளது.

இதனால், இரண்டு பேரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், துணிவு படத்தை ரெய் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில், இதற்கு 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வாரிசு படத்திற்கு லலித் சார்பில் இன்னும் தியேட்டர்கள் கைப்பற்றவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படங்களுக்கு எந்தத் தியேட்டர்களும் இதுவரை ஒதுக்கவில்லை என்றும், அப்படி வெளியாகும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj