1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (22:57 IST)

அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!

அஜித், விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த படங்களின் கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து விட்டு உடனடியாக ஒத்துக் கொள்வதே தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது 
உதாரணத்திற்கு ’தளபதி 64’ படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் மற்ற படங்களில் கொடுத்த கால்ஷீட் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து ’தளபதி 64’ படத்திற்கு கொடுத்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அஜீத் நடிக்கவுள்ள வலிமை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் 
 
தற்போது தலைவி படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த படம் முடியும் வரை அந்த கெட்டப்பை மாற்ற முடியாது என்று கூறி அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது