1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Aravind swamy wants to direct dhanush but not happened

அரவிந்த் சாமி இயக்கத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ!

Kallabard
90 களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. அவர் நடித்த ரோஜா, பம்பாய் ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றன.  ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் நடிப்பதை நிறுத்திக்கொண்டு வியாபாரத்தில் இறங்கினார்.

அதன் பிறகு கடல், தனி ஒருவன் மற்றும் போகன் ஆகிய படங்களின் மூலம் நடிகர் அரவிந்த் சாமி மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்போது அவர் நடிப்பில் கள்ளபார்ட் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுக்க உள்ளார். விரைவில் அவர் இயக்கத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முதலில் அரவிந்த் சாமி இந்த படத்தில் தனுஷைதான் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் தனுஷ் அதில் அக்கறை செலுத்தாததால் பஹத் பாசில் பக்கம் தாவி உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கமல் & மணிரத்னம் படத்தின் ப்ரமோஷன் காட்சிகளை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள்!