அரண்மனை 3 படத்தின் முக்கிய அப்டேட்....முன்னணி நடிகை தகவல்
அரண்மனை 3 படத்தின் தனக்கான வேலைகள் முடிந்ததாக சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக அவர் இயக்கிய ஆக்ஷன் படம் வெளியானது. அதையடுத்து சூட்டோடு சூடாக வட இந்தியாவில் அரண்மனை 3 படத்தை இயக்கி வந்தார்.
இந்த படத்தில் சாக்லேட் பாய் ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறாராம் சுந்தர் சி. படத்தின் உச்சபட்ச காட்சிகளுக்காக பொள்ளாச்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் செட் அமைத்து படம் பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகள் படத்தின் பேசுபொருளாக இருக்கும் என படக்குழுவினர் கடுமையாக உழைத்தனர்.
இந்நிலையில், ஆர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா,சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்பட்த்திற்கு சத்யா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தனக்கான டப்பிங் பணிவேலைகள் முடிந்துவிட்டதாக சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.