பாலைவனத்தில் அரபி குத்து ஆடும் ஷேக்குகள்! – வைரலாகும் வீடியோ!
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலுக்கு பாலைவனத்தில் ஷேக்குகள் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது.
அதை தொடர்ந்து தற்போது முதல் சிங்கிளான அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் 24 மணி நேரத்திற்கு 25 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பாலைவனத்தில் ஷேக் கெட்டப்பில் ஓட்டங்கள் மத்தியிலே சிலர் அரபிக் குத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.