1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 ஜனவரி 2022 (17:59 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண நிச்சயதார்த்தம்: குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்!

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண நிச்சயதார்த்தம்: குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்!
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததாகவும் இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் இரு குடும்பத்தினரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மூத்தமகள் காதிஜ் ரஹ்மானுக்கும்,  ரியாஸ் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 29 ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு தரப்பின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
மேலும் ஏஆர் ரஹ்மான் மகளின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.