1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:24 IST)

தளபதி 65 படத்தில் இணைந்த டிக்டாக் பிரபலம்!

தளபதி 65 படத்தில் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் அபர்ணா தாஸ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் பூஜா ஹெக்டேவைத் தவிர மற்றொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் அபர்ணா தாஸும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.