வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 10 ஜூன் 2017 (17:33 IST)

ஸ்ருதியை தொடர்ந்து அனுஷ்காவும் சொன்ன நோ எதற்கு தெரியுமா?

சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதை அடுத்து அனுஷ்காவும் நோ சொல்லிவிட்டாராம்.


 

 
சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படம் சங்கமித்ரா. சரித்திர கதையான இந்த படத்தில் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஸ்ருதி ஹாசன் திடிரென விலகினார். படத்திற்காக வாள் பயிற்சியெல்லாம் எடுத்து, படப்பிடிப்பு துவங்க வேண்டிய நிலையில் படத்தில் இருந்து விலகினார்.
 
இதையடுத்து சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவும் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கையில் ஒரு படம் மட்டுமே வைத்திருக்கும் அனுஷ்கா தேதி இல்லை என கூறி மறுத்து விட்டாராம்.
 
இதற்கு ஒரு சிலர் ஏற்கனவே பாகுபலி இரண்டு வருடம், அடுத்து சங்கமித்ராவிலும் கட்டயம் இரண்டு வருடம் ஆகும் எனவே வேண்டாம் என மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.