வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (11:31 IST)

பிரபாஸுக்கு ஒகே சொல்ல தயங்கும் அனுஷ்கா!!

பாகுபலி 2 படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தாலும், அதை தாண்டி பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரமும் பிரம்மாண்டமாய் பேசப்பட்டது.


 
 
ஒரு புறம் இது இருக்க பிரபாஸ் அனுஷ்கா இருவரும் தங்களது அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டனர். பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
 
இந்த படத்திற்காக தனது லுக்கை முழுமையாக மாற்றியுள்ளார். இந்நிலையில் படத்திற்கு கதாநாயகியை தேர்வு செய்ய படக்குழு படாதபாடுபட்டு வருகிறது.
 
பாலிவுட் நடிகைகள் சிலர் இந்த படத்தில் நடிக்க மறுத்தனர். ஆனால், பிரபாஸ் படத்தில் அனுஷ்காவையே தேர்வு செய்ய பரிந்துரை செய்தாராம். படக்குழுவும் பிரபாஸ் கூறுயதை கேட்டு அனுஷ்காவிடம் பேசியுள்ளனர்.
 
ஆனால், அனுஷ்கா இன்னும் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. பிரபாஸுடன் இணைத்து நிறைய கிசுகிசுகள் வருவதால் அனுஷ்கா படத்தை ஒப்புக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார் என கூறப்படுகிறது.