ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (18:09 IST)

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். 

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாகமதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ஜி அசோக், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கி 2026 ஆம் ஆண்டு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.