1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (07:30 IST)

லைகா தயாரிப்பில் அனுபமா நடிக்கும் புதிய படம்… டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் சர்ச்சைகளை உருவாக்கி 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் இப்போது அனுபமா முதன்மை வேடத்தில் நடிக்கும் லாக்டவுன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஏ ஆர் ஜீவா என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.