1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (14:17 IST)

இடைவிடாத 100 இளையராஜா பாடல்கள் – ரசிகர்களை வியக்கவைத்த பாடகர் !

இளையராஜாவின் 100 மெலடி பாடல்களை இடைவிடாமல் பாடி திருச்சூரை சேர்ந்த பாடகர் ஒருவர் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

திருச்சூரை அடுத்த கோழிக்கோடு தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால் 10 மணிநேரம் இடைவிடாமல் 100 பாடல்களை பாடகர் அனூப் சங்கர் என்பவர் பாடி அசத்தியதுதான். அதில் தமிழர்களுக்கு பெருமை என்னவெனில் அந்த 100 பாடல்களும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்பதுதான்.

காலை 11 மணிக்கு பாட ஆரம்பித்த அவர் இடையில் தண்ணீர் கூட குடிக்காமல் இரவு 10 மணி வரை பாடினார். நிகழ்ச்சியில் இளையராஜாவின் முக்கியமான பாடல்களான ஜனனி ஜனனி ,அம்மா என்றழைக்காத, சுந்தரி கண்ணால் ஒரு சேதி...(தளபதி), கண்ணே கலைமானே...(மூன்றாம் பிறை), அந்த நிலாவத் தான் நான்...(முதல் மரியாதை), தூளியிலே ஆட வந்த..(சின்ன தம்பி) போன்ற மெலடி பாடல்கள் இடம்பெற்றன.  இந்த நிகழ்ச்சியில் அவரோடு சேர்ந்து மொத்தம் 25 இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.