திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (18:36 IST)

''அண்ணாத்த'' பட அடுத்த சிங்கில் ரிலீஸ் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல் ’அண்ணாத்த’ படத்தையும் டீசர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
 
மருதாணி என்று தொடங்கும் இந்த பாடல்  இன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.