வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (18:24 IST)

’’அண்ணாத்த ’’பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின டீசர் ரிலீஸ் தேதி ரிலீஸாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடிய ஓப்பனிங் சாங் மற்றும்   சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைத்து பாடியுள்ள #SaaraKaattrae சாரக்காற்றே என்ற பாடல்  டிரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில்,  அண்ணாத்த படத்தின் டீசர்#AnnaattheTeaser வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மாலை  6மணிக்கு ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.