1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (20:21 IST)

என் வாழ்க்கையை நாசமாக்கிய நடிகர்... பிரிந்த காதலனை நினைத்து புலம்பும் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
 
ஆனால் தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் விட்ட இடத்தை தேடி பிடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு ஜெய்யுடனான அவரது காதல் முறிந்துவிட்டார் அஞ்சலி. ஜெய் மீது இருந்த நம்பிக்கை குறைந்தது தான் இந்த காதல் முறிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அது குறித்து பேசியுள்ள அஞ்சலி, நான் காதலிக்கிறேன் என்று யாரிடமும் கூறியதில்லை. சினிமாவில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் பலர் அப்படித்தான் எழுதுவார்கள். அதை பற்றி நான் எதையும் பேசியதும் இல்லை பேச விருப்பமும் இல்லை. அதை நான் செய்தால் தானே அதை பற்றி நான் கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு நடிகரால் தன் வாழ்க்கை சில ஆண்டுகள் திசை மாறியதாக பேட்டி ஒன்றில் ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.