சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு!

Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:17 IST)

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஞ்சாம்பத்திரா திரைப்படத்தின் பார்ட் 2 வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள படங்களுக்கு தென்னிந்தியா மட்டுமில்லாமது இப்போது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வருடத்துக்கு குறைந்தது 10 மலையாளப் படங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில் கடந்த ஆண்டு அஞ்சாம் பத்திரா என்ற த்ரில்லர் திரைப்படம்
வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது அஞ்சாம் பத்திரா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஆறாம் பத்திரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த குஞ்சாக்க போபனே இந்த படத்திலும் நடிக்க உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :