வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:28 IST)

அதுக்காக 5 வருஷமா கத்துக்கிட்டு இருக்கேன்... கணவரிடம் ஆசையா கேட்ட அனிதா!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் 4ல் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
 
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் ஜோடியாக நடனமாடி வருகிறார். இந்நிலையில் தனது திருமண நாளில் அழகிய பதிவு இன்றை இட்டுள்ளார். அதில், " சிறந்த கணவன்! என் குடும்பத்திற்கு சிறந்த மருமகன் (மற்றும் இரண்டாவது மகன்)! எனது நாதனார்கள் & மாமியர்களுக்கு சிறந்த சகோதரர் மற்றும் மகன்.  ஒவ்வொரு விதத்திலும் சரியானவர்!
 
கடவைக்குள் என் வாழ்க்கையில் பண்ண ஒரே நல்ல விஷயம் உன்ன மீட் பண்ண வச்சது தான். எல்லோரும் சொல்லுவாங்க ஒரு மீடியா பெண்ணின் வளர்ச்சியை திருமணம் தடுத்து நிறுத்தும் என்று ஆனால் எங்கள் திருமணத்திற்கு பிறகு நான் வளர்ந்தேன்! உங்கள் நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் ஊக்கத்தின் காரணமாக!
 
அனைத்து ஏற்ற தாழ்வுகளையும் மீறி நீங்கள் என்னிடம் காட்டும் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி! எனக்காக நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி! ஒன்றாக நம் கனவுகளைத் துரத்தலாம் பப்பு! என் வளர்ச்சியோட காரணமாக இருந்தும், ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கும் உனக்கு திருப்பி குடுக்க காதல் தவிர வேறு எதுவும் இல்ல! நம் காதல் போல் நாமும் வளர்வோம்!இரண்டாவது திருமண ஆண்டு வாழ்த்துக்கள் பப்பு! மேலும் 61 வது மாத காதல் ஆண்டுவிழா! சிக்ரமா “ஐ லவ் யூ” சொல்லி தொல 5 வர்ஷமா வெயிட் பண்றேன். என கூறி பதிவிட்டுள்ளார். பிரபா வார்த்தையால் ஐ லவ் யூ என்று சொல்லவில்லை என்றாலும் அவர் உங்களை மிகவும் காதலிக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.