திடீர் திருமணத்திற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய அனிதா சம்பத்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் தற்போது காப்பான் படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர்.
இந்நிலையில் தற்போது தனது திடீர் திருமணத்திற்கான காரணத்தை பிரபல யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தன்னுடன் சேனலில் வேலை பார்த்த கிராபிக் டிசைனரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். நான் பிரபலமாவதற்கு முன்னர் இருந்தே என்னை நேசித்த ஒரு நபர் என் பப்பு. நாங்கள் இருவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் எங்கள் முடிவை இருவரது பெற்றோரும் நம்பினார்கள். பின்னர் இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் செய்துவைத்தனர்.
கல்யாணத்துக்கு முன்னர் நானே திருமண செய்தியை சொல்லாம் என்று தான் நினைத்தேன். ஆனால், என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி ப்ளாக் செய்யப்பட்டதால் சொல்லமுடியாமல் போய்விட்டது என வருத்தத்துடன் கூறினார்.