திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:03 IST)

நான் குழந்தையில்ல, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு: அனிதாவின் குழந்தைத்தனம்!

நான் குழந்தையில்ல, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு:
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் குழந்தை இல்லை எனக்கு திருமணமாகிவிட்டது நானும் பொம்பளைதான என்று அனிதா குழந்தைத்தனமாக அழுதது பார்வையாளர்களை கடுப்பை ஏற்றியது 
 
நேற்றைய நிகழ்ச்சியின்போது சோமசேகர் மற்றும் ஆரி பேசிக்கொண்டிருந்தபோது அனிதா தன்னை யாருமே பேச விட மாட்டேன் என்கிறார்கள். நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை, நானும் பொம்பளைதான், எனக்கு திருமணமாகிவிட்டது
 
என்னுடைய வீட்டில் எந்த முடிவையும் நான்தான் எடுப்பேன். நான் செய்தி வாசிப்பவர். எனக்கு அரசியல் தெரியும். உலக அரசியல் தெரியும். என்னை ஏன் பேச விட மாட்டீர்கள் என்று தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார். இருப்பினும் கடைசி வரை அவர் என்ன பேச வந்தார் என்பதை சொல்லவே இல்லை 
 
ஆரியும் பலமுறை நீ என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை சொல் என்று கூறியும் என்னை பேச விட மாட்டேன் என்கிறார்கள், என்னுடைய கருத்தைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் நான் நாமினேஷனில் சிக்கியுள்ளேன். ஒரு வேளை என்னை பேச விட்டிருந்தால் நான் நாமினேஷனில் இருக்க மாட்டேன் என்று கூறியது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களையும் எரிச்சல் படுத்தியது