வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:46 IST)

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி பிரபலம் ஆனவர் அனிருத். அவரின் முதல் படமான ‘3’ ல் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறிடி என்ற பாடல் உலக வைரல் ஆனது. அதையடுத்து அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அனிருத்தான் இசை. தமிழ் தாண்டி இப்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் இசையமைக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அனிருத் மீது சமூகவலைதளத்தில்  ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அனிருத் தன்னுடைய இசையில் கிட்டத்தட்ட 370 பாடல்களை உருவாக்கியுள்ளார். அதில் 165 பாடல்களை அவரே பாடியுள்ளார். மேலும் தன் பாடல்களில் தனுஷ், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நடிக்கும் அவர்களையும் பாட வைக்கிறார். இதனால் அனிருத் தன் இசையில் தொழில்முறை பாடகர்களுக்கு வாய்ப்பே அளிப்பதில்லை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.