1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (16:18 IST)

இணையத்தை கலக்கும் மினிருத் - சூப்பர் வைரலாகும் கியூட் போட்டோ!

குத்தாட்டம், காதல், காதல் தோல்வி,உள்ளிட்ட அனைத்து வகையான பாடல்களை கொடுத்து படத்தின் ஹீரோவுக்கு நிகராக பேமஸ் ஆன இசையமைப்பாளராக சிறந்து விளங்குகிறார் அனிருத். கடந்த 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் முதல் படத்தின் "கொலவெறி" பாடலிலேயே கொலவெறி ஹிட் அடித்து பேசப்படும் திறமைசாலியாக மாறினார்.

விஜய்யின் கத்தி தீம் ம்யூஸிக், அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ஆலுமா டோலுமா, தலைவர் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த மரண மாஸ், சும்மா கிழி அதையடுத்து தற்போது விஜய்யின் மாஸ்டர் பட குட்டி ஸ்டோரி வரை தொட்டதெல்லாம் ஹிட் தான்.

ஹீரோக்களுக்கு நிகராக பெண் ரசிகர்கள் அதிகம் உள்ள இசையமைப்பாளாக அனிருத் சிறந்து விளங்கிவருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்த சிறுவயது போட்டோ ஒன்றை வெளியிட்டு " இந்த வயசுல இருந்தே நான் வளர்வதை நிறுத்திவிட்டேன்னு சொல்லுறாங்க " என கிண்டலாக கூறி பதிவிட்டுள்ளார்.  ஆமாம், அதென்னவோ சரி தான் Height மட்டும் தான் கூடி இருக்கு மற்றபடி அப்டியே தான் இருக்காரு... இந்த குட்டி மினிருத் அனைவரையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

They say I stopped growin up from this moment on