அனிருத்தின் இனிமையான இசையில் மயங்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் - வீடியோ!
தனுஷின் 3 படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளாராக அறிமுகமான அனிருத் தொடர்ந்து அஜித், விஜய் , ரஜினி உள்ளிட்ட பல உச்ச நடிகர்களுக்கு இசையமைத்து பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்னதாகவே, வாத்தி கம்மிங் , குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்கள் செம ஹிட் அடித்துவிட்டது. இந்நிலையில் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த "கல் ஹோ நா ஹோ" என்ற படத்தின் பின்னணி இசையை பியானோவில் வாசித்த அழகிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இனிமையான இந்த இசையை கேட்ட பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர், "இது ரொம்பவே அழகாக இருக்கு'' என பாராட்டியுள்ளார். உடனே அவருக்கு ரிப்ளை செய்த அனிருத், ''நன்றி சார், இந்த படத்தோட இசை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என்னை மிரள செய்கிறது'' என கூறினார். இவர்கள் இருவரின் இந்த கான்வர்சேஷனை கண்ட இணையவாசிகள், சீக்கிரம் அனிருத்தை ஒரு பாலிவுட் படத்தில் கமிட் செய்யுங்கள் என கூறி கோரிக்கை வைத்துள்ளனர்.