1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (20:22 IST)

அனிருத்துக்கு கிடைத்த பெருமை

2017இல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் என சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், அனிருத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

 
சென்னை டைம்ஸ், 2017இல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் யார் யார் என வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இசையமைப்பாளரும் இவர்தான்.
 
இரண்டாம் இடம் சிவகார்த்திகேயனுக்கும், மூன்றாம் இடம் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கும் கிடைத்துள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’வில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் விக்ரம் மகன் த்ருவ் விக்ரமுக்கு நான்காமிடம் கிடைத்துள்ளது.
 
துல்கர் சல்மான் 5வது இடத்திலும், ராணா 6வது இடத்திலும், தனுஷ் 7வது இடத்திலும் உள்ளனர். ‘பிக் பாஸ்’ ஆரவ் 8வது இடத்திலும், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி 9வது இடத்திலும், அதர்வா 10வது இடத்திலும் உள்ளனர்.
 
முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்றவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.