ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (07:42 IST)

அனிருத் கையில் 12 படங்கள்… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் லைன் அப்!

தமிழ் சினிமாவின் முனன்ணி இசையமைப்பாளராக தற்போது இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய அனைவரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழை தாண்டி பாலிவுட்டில் அவர் அறிமுகமான ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியுள்ளது.

இதுதவிர அவர் கைவசம் தற்போது 12 படங்கள் கைவசம் உள்ளன. அதில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் 23 ஆவது படம், விக்னேஷ் சிவனின் LIC படம், கவினின் நான்காவது படம்,  ஜூனியர் என் டி ஆரின் தேவரா திரைப்படம், அல்லு அர்ஜுனின் அடுத்த படன், அதர்வா மற்றும் குஷி கபூர் நடிக்கும் புதிய படம் என அடுத்த ஆண்டு முழுவதும் அவர் கைவசம் படங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் இளையராஜா எப்படி தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்தாரோ அதுபோல இப்போது அனிருத் இசையமைத்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.