1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (10:15 IST)

“என் அடுத்த படத்தை இயக்குபவர் இவர்தான்”… சீக்ரெட் உடைத்த கமல்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் ரிலீஸாகியுள்ளது. பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையோடு படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல் தன்னுடைய அடுத்த படம் குறித்து தற்போது ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலிடம் அடுத்த பட இயக்குனர் பற்றி கேள்வி கேட்ட போது “மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன். ராஜ்கமல் பிலிம்ஸ்” என்று கூறியுள்ளார். மகேஷ் நாராயணன் விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். சமீபத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மாலிக் திரைப்படம் மூலமாக கவனிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.