1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Raj Kumar
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (11:22 IST)

இந்த வயசுலயே இவ்ளோ க்ளாமர் தேவையா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அனிகா!

Anika Surendran
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வலம் வரும் அனிகா சுரேந்திரன் தான் க்ளாமராக உடை அணிவது குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.



மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். மலையாளத்தில் பல படங்களில் பல ஹீரோக்களுக்கு குழந்தையாக நடித்த அனிகா, தமிழில் ‘என்னை அறிந்தால்’ , ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் அஜித்குமாரின் மகளாக நடித்தார். அதனால் தமிழ் சினிமாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

தற்போது குழந்தை நட்சத்திரத்திலிருந்து நடிகை என்னும் அவதாரம் எடுத்துள்ள அனிகா அடுத்தடுத்து பல படங்களை கமிட் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் அனிகா நடித்த ஓ மை டார்லிங் என்ற மலையாள படம் வெளியானது. அந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக்காட்சிகளிலும், கவர்ச்சி காட்சிகளிலும் அவர் நடித்திருந்தார். தற்போது 19 வயதாகும் அனிகா இப்போதே க்ளாமரில் இறங்கியது பல விமர்சனங்களுக்கு உள்ளானது.


அதுபோல சமீபமாக அனிகா சுரேந்திரன் நடத்தும் போட்டோஷூட்டுகளும் இளைஞர்களை கவரும் விதத்தில் க்ளாமர் தூக்கலாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. தொடர்ந்து தன் மீது வைக்கப்படும் இந்த விமர்சனம் குறித்து பேசிய அனிகா “எனக்கு ஸ்டைலான ஆடைகள் அணிய பிடிக்கும். கவர்ச்சியான ஆடைகள் அணிவது என் தனிப்பட்ட விஷயம். ஆனால் நான் என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள். நானும் ஒரு மனுஷிதான். சினிமாவில் உள்ள பெண்கள்தான் பெரிய அளவில் இதுபோல விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K