வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (12:46 IST)

விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்கும் ஆண்ட்ரியா

விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்கும் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா விஜய் சேதுபதியின் மனைவியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. மத்திய சிறைச்சாலை போன்று அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு முன்பே ஆண்ட்ரியா வடசென்னையில் ஒப்பந்தமானார். தற்போது அவரது வேடம் எதுவென்று தெரியவந்துள்ளது. அவர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்க உள்ளாராம்.

தனுஷ் நாயகனாகும் இந்தப் படத்தில் டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, சுப்பிரமணிய சிவா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை. லைக்காவும், தனுஷின் வுண்டர்பாரும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்