புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (14:06 IST)

வந்துடுச்சுப்பா அந்தகன் சுதந்திர தின போஸ்டர்… ஆனா இந்த தடவ வேற மாதிரி!

பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸானது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்து, சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். அந்த  நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்தகன் படக்குழு இன்று சுதந்திர தின வாழ்த்துப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தகன் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருந்த நிலையில் அப்போதெல்லாம் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை தினங்களுக்கு எல்லாம் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு வந்தனர். அது ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டிரியலாய் மாறியது. இந்நிலையில் தற்போது படம் ரிலீஸாகிவிட்ட நிலையில் கூட சுதந்திர தின வாழ்த்துப் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் வந்துடுச்சுய்யா போஸ்டர் என்று கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.