திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (17:07 IST)

தயாரிப்பாளர் ஆகும் அன்புமணியின் மகள்.. டைட்டில் அறிவிப்பு..!

Anbumani
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியின் மகள் தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், அவர் தயாரிக்கும் முதல் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள்  சங்கமித்ரா சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சௌமியா அன்புமணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில், சங்கமித்ரா தற்போது திரைப்பட தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு "அலங்கு" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இந்த படத்தை சக்திவேல் இயக்கியுள்ளார். அவர் ஏற்கனவே "பயணிகள் கவனிக்கவும்" உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆக்சன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் நாயகனாக குணாநிதி நடித்துள்ளார். அவருடன் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத், ஸ்ரீ ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும், விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran