செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (09:15 IST)

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் அன்பிற்கினியாள்!

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஹெலன் திரைப்படம் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

ரிலிஸூக்கு முன்னரே இந்த படம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக வந்துள்ளது என்றும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறியுள்ளனராம். மலையாளப் படத்தின் அழுத்தம் குறையாமல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராட்டியுள்ளனராம்.