1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:20 IST)

கமல் & மணிரத்னம் படத்தின் ப்ரமோஷன் காட்சிகளை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ சென்னையில் ஷூட் செய்யப்பட்டது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான் அன்பறிவ் மாஸ்டர்கள் கூடவே இருந்து சில காட்சிகளை இயக்கிக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.