1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (12:26 IST)

கன்டிஷன் மேல் கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் தயாரிப்பாளர்கள்!!

தெலுங்கு படம் மூலம் சினிமா நடிகையானவர் ஆனந்தி. தமிழில் கயல் படம் மூலம் பிரபலமானார். 


 
 
ஆனந்திக்கு மார்க்கெட் மட்டும் பிக்கப் ஆகவில்லை. இருப்பினும் சம்பள விஷயத்தில் ஆனந்தி கறாராக இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியுள்ளது. 
 
ஆனந்தி தற்போது மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மன்னர் வகையறா படத்திற்கு முன்பு ஆனந்தி ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கினார். 
 
இந்நிலையில் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம். பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படம் என்றால் ரூ. 25 லட்சமும், புதுமுக இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்றால் ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் ஆனந்தி. 
 
மார்க்கெட்டு பிக்கப் ஆகாமலேயே சம்பளத்தை உயர்த்திவிட்டரே என்று ஆனந்தி மீது தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.
 
மேலும், ஜி.வி. பிரகாஷ் இனி ஆனந்தியுடன் ஜோடி சேர தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.