சாக்கு போக்கு சொல்லாமல்.... கடமையை கரெக்ட்டா ஃபாலோ பண்ணும் எமி ஜாக்சன் - வீடியோ!
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை அழித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
மேலும், பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் 24 மணி நேரமும் சமூவலைத்தளங்களில் நேரத்தை செல்விட்டு வருகின்றனர். அந்தவகையில் வெளியில் எங்கும் செல்ல முடியாததால் வீட்டிற்குள்ளேயே படிக்கட்டில் ஒர்க் அவுட் செய்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன்.
இதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது. உங்களை பார்த்தால் கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன தடங்கள் வந்தாலும் இப்படி காரியத்தில் கண்ணாக இருப்பதால் தான் இன்னும் இவ்வளவு அழகாக தோன்றுகிறீர் என கூறி வருகின்றனர் இணையவாசிகள்.