1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (13:49 IST)

விவாகரத்துக்கு பிறகு பிரபல நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்?

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். 
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
 
இதையடுத்து திடீரென தனது காதல் கணவரை விவகாரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஏமி ஜாக்சன் பிரபல நடிகரான Ed Westwick என்பவரை டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 
அந்த நடிகர் பல நடிகைகளுடன் டேட்டிங் சென்று அவர்களுடன் தவறாக நடந்துக்கொண்டதாக வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த வழக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அப்படியே முடித்து வைக்கப்பட்டது.