திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 9 மே 2018 (10:06 IST)

பிகினி உடையில் ரசிகர்களைச் சூடேற்றும் எமி ஜாக்சன்

பிகினி உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களைச் சூடேற்றி வருகிறார் எமி ஜாக்சன். 
இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்தவர் எமி ஜாக்சன். பிரபல மாடலான இவர், ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஏ.எல்.விஜய்  இயக்கிய இந்தப் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் எமி ஜாக்சனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
 
எனவே, தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்தவர், தற்போது கன்னடப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ‘த வில்லன்’ என்று  பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஷிவ ராஜ்குமார், சுதீப், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரேம், இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராபிக்ஸ் வேலைகளால் தாமதமாகிவரும் இந்தப் படத்தின் ரிலீஸ், அனேகமாக இந்த வருட தீபாவளிக்கு இருக்கலாம் என்கிறார்கள்.
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பிகினியில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். இதுபோல் அவர் பதிவிடுவது புதிது இல்லை என்றாலும், கோடை வெயிலால் சூடேறிக் கிடக்கும் தமிழக இளைஞர்களை இன்னும் சூடேற்றுவது போல் இருக்கிறது அவருடைய புகைப்படம். இந்தப் புகைப்படத்தை, நடிகை சமந்தாவும் லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.