வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

ரஜினியின் 'காலா'வில் முதல்வரின் மனைவி! இதுக்குத்தான் அந்த சந்திப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினியை நேற்று மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் சந்தித்தார் என்பதை பார்த்தோம். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு, சமூக பிரச்சனைகள் குறித்த அலசல் சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இந்த சந்திப்புக்கு ஒரு பின்னணி உள்ளது தற்போது  தெரிய வந்துள்ளது.



 


அம்ருதா ஒரு நல்ல கிளாசிக்கல் பாடகி என்பதும் சமீபத்தில் வெளியான 'Phir Se' என்ற மியூசிக் ஆல்பத்தில் அம்ருதாவுடன் சேர்ந்து அமிதாப் பச்சனும் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 'காலா' படத்தில் ஒரு பாடலை பாட தனக்கு சான்ஸ் தருமாறு ரஜினியிடம் கேட்கவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

முதல்வரின் மனைவியே நேரடியாக வந்து சந்தித்து சான்ஸ் கேட்கையில் கொடுக்காமல் இருக்க முடியுமா? நிச்சயம் இதுகுறித்து இயக்குனரிடமும், இசையமைப்பாளரிடமும் பேசுகிறேன் என்று ரஜினி கூறியதாக கிசுகிசு கிளம்பியுள்ளது. விரைவில் இந்த பாடல் குறித்த தகவல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.