வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (12:49 IST)

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படமாகிறது

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை படமாக்க முன்வந்துள்ளார் இந்திப்பட இயக்குனர், நிலா மதாப் பாண்டா. 
 
அப்துல் கலாமினால் ஈர்க்கப்பட்ட டெல்லி சேரி சிறுவன், அவரைப் போலவே வாழ்க்கையில் உயர முடிவெடுப்பதை பின்னணியாக வைத்து வெளியான, ஐ யாம் கலாம் படத்தை இயக்கியவர் நிலா மாதப் பாண்டா. இவர்தான் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை படமாக்க திட்டமிட்டுள்ளார். 
 
தற்போது அதற்கான தரவுகளை சேகரிப்பதில் முனைந்துள்ளார் பாண்டா. அப்துல் கலாமாக நடிக்க அவரது முதல் தேர்வு அமிதாப் பச்சன். படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கிவிட்டதாக நிலா கூறினார்.