வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (16:18 IST)

“உங்களோடு என்னை ஒப்பிடமுடியாது…” ரஜினிக்கு அமிதாப் ட்வீட்!

அமிதாப் பச்சன் நேற்று தன்னுடைய 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமிதாப் பச்சன். 1969ல் வெளியான சாத் இந்துஸ்தானி என்ற படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கிய அமிதாப் பச்சன், தற்போது வயது மூப்பு காரணமாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள அமிதாப் “உங்கள் வாழ்த்து எனக்கு அதிக மதிப்பைக் கொடுத்துள்ளது. உங்கள் உயரத்தோடும் சாதனைகளோடும் என்னை ஒப்பிடமுடியாது. நீங்கள் என் சக நடிகர் மட்டுமில்லை நண்பரும் கூட” எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.