ஆண்டு சந்தாவை அதிகப்படுத்திய அமேசான் ப்ரைம்!
அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் தங்கள் ஆண்டு சந்தாவை அதிகப்படுத்தியுள்ளது.
ஓடிடி தளங்களில் உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்று அமேசான் ப்ரைம் வீடியோ. இந்தியாவில் நெட்பிளிக்ஸை விட அதிக வாடிக்கையாளர்களோடு முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அதன் ஆண்டு சந்தா குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.
இதுவரை ஆண்டுக்கு 999 ரூபாய் வசூலித்த அமேசான், டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு 1499 ரூபாயாக உயர்த்த உள்ளதாம்.