1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (10:40 IST)

உடலுறவின் போது பசையைப் பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் உடலுறவின் போது காண்டத்துக்கு பதிலாக பசையை பயன்படுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் என்ற அந்த இளைஞர் தனது காதலியோடு தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் கைவசம் கருத்தடை சாதனம் எதுவும் இல்லாததால் தங்கள் கைவசம் இருந்த பசையைக் கொண்டு சல்மானின் ஆணுறுப்பை அடைத்துள்ளனர்.

இதனால் சல்மான் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த நிலையில் சல்மான் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். சல்மானுக்கும் அவரது காதலிக்கும் போதை பழக்கம் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக போலிஸார் இப்போது  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சல்மானின் காதலியையும் தேடி வருகின்றனர்.