1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (20:21 IST)

கார் விஷயத்தில் கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த அமலாபால்

நடிகை அமலாபால் சொகுசுக்கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக செய்திகள் வெளியானதும் புதுவை ஆளுனர் கிரண்பேடி இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்



 
 
ஆனால் அமலாபாலுக்கு ஆதர்வாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், புதுவை போக்குவரத்து அமைச்சரும் கருத்து தெரிவித்ததை அடுத்து ஆளுனர் கிரண்பேடி அமைதியானார்
 
இந்த நிலையில் அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண்பேடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியிருப்பதாவது: நான் படகு சவாரி செய்கிறேன். இதில் பயணிப்பதால் சட்டத்தை மீறிவிட்டதாக கூறமுடியாது. என் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரிடமும் இதுகுறித்து நான் ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்துவிட்டேன். இந்த நகர வாழ்க்கையில் இருந்தும் ஊகங்களில் இருந்தும் தப்பிக்க நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்