வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:50 IST)

கடாவர் படத்தில் நடிக்க நிஜமாகவே பிரேத பரிசோதனையை பார்த்தேன். அமலாபால்

amala paul
அமலாபால் நடித்த கடாவர் திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படத்தில் அவர் பிரேத பரிசோதனை டாக்டராக நடித்திருப்பார் என்பது அறிந்ததே
 
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே பிரேத பரிசோதனையை பார்த்தேன் என்றும் இதற்காக இயக்குனருடன் பல மருத்துவமனைகளில் சென்றேன் என்றும் பேட்டி ஒன்றில் நடிகை அமலாபால் கூறியுள்ளார்
 
இந்த படத்தின் மூலம் பல மருத்துவ ஆய்வுகளை நான் கற்றுக் கொண்டேன் என்றும் குறிப்பாக பிரேத பரிசோதனை செய்வதில் உள்ள நுணுக்கங்களை பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் கடாவர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் நானும் என்னுடைய குழுவினரும் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது என்றும் அமலாபால் பேட்டியில் கூறியுள்ளார்.