ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (19:15 IST)

போர்வை போர்த்திக்கொண்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது நவராத்திரியின் 4 வது நாள் தேவி குஷ்மந்தாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து வரும் கதிர்கள் போன்ற அனைத்து திசைகளிலும் அவளுடைய ஒளி பரவுகிறது. எனக்கூறி நவராத்திரி கொண்டாட்டம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்