1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (21:45 IST)

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

பிரபல நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களாக கர்ப்பிணி ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு நடிகை அமலாபால் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர் அமலாபால் கர்ப்பிணியாக இருந்த போது பலவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் குறிப்பாக வளைகாப்பு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஜூன் 11ஆம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். மேலும் குழந்தை உடன் அவர் வீடு திரும்பும் வீடியோவும் அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து அமலாபால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 
Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jagat Desai (@j_desaii)