1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (10:40 IST)

ராஜா ராணி சீரியலுக்கு குட்பை சொன்ன ஆல்யா மானசா… ஏன் தெரியுமா?

ராஜா ராணி சீரியலின் மையக் கதாபாத்திரமான சந்தியா வேடத்தில் நடித்த ஆல்யா மானசா இப்போது அதில் இருந்து விலகியுள்ளார்.

ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதிலாக செம்பருத்தி ஷபானா நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் மனைவியும் ராஜா ராணி  என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றவரான ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் 

அவருக்கு பிரசவ காலம் நெருங்கி வருவதை அடுத்து அவர் தற்காலிகமாக ராஜா-ராணி-சீரியல் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் இப்போது ரியா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  ரியா நடித்துள்ள புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.