பிரண்ட்ஷிப்' பில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாகும் லாஸ்லியா!

papiksha| Last Modified திங்கள், 3 பிப்ரவரி 2020 (19:31 IST)


முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை குறித்து
ஹர்பஜன் சிங் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணையத் தொடர். இன்று ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன், தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப் பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர், தல, தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று படத்தின் போஸ்டருடன் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல்படம் இதுவாகும். இப்படத்தின் மூலம்
ஹர்பஜனும், லாஸ்லியா இருவரும் ஜோடியாக இணைந்து படம் நடிக்கவிருப்பது சமூகவலைத்தளங்களில் செம்ம வைரலாக பேசப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :