1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:33 IST)

ரஜினியுடன் படம் பண்ண மறுத்தேனா? வதந்தியால் கடுப்பான இயக்குனர்!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.

2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு இப்போது அவர் பிருத்விராஜை வைத்து கோல்ட் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பதிவில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ‘2015 ஆம் ஆண்டு பிரேமம் படம் வெளியான பிறகு வெளியான ஒரு ஆன்லைன் ஊடகத்தின் செய்தியில் நான் ரஜினிகாந்துடன் படம் பண்ணமாட்டேன் என்ற பொய்யான தகவல் வெளியானது. அதுபற்றி  ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்னிடம் விசாரித்தபோது நான் அந்த கருத்தை சொல்லவில்லை எனக் கூறினேன். அவர் என் விளக்கத்தை புரிந்துகொண்டார்.

ஆனால் இப்போது ஒரு குணச்சித்திர நடிகரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரும் இந்த செய்தியை குறிப்பிட்டார். இந்த வதந்தி 6 ஆண்டுகளாக பரவிக்கொண்டு வருவது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் ரஜினிசாருடன் படம் பண்ணி இருந்தால், அது 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, ரசிகர்களையும் திருப்திபடுத்தி இருக்கும். எல்லோரும் லாபம் அடைந்திருப்பார்கள். இந்த செய்தியை பரப்பியவர் ஒருநாள் என் முன் தோன்றுவார். அதற்காக காத்திருக்கிறேன். அனைவரும் நான் ரஜினிகாந்தோடு இணைந்து படம் பண்ணவேண்டும் எனப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.