ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (11:24 IST)

ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்புக் கோரிய அல்போன்ஸ் புத்திரன்!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குனர் ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ரோஹித் ஷெட்டி இயக்கிய சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழர்களைக் குறித்தும் தமிழ் சினிமாவைக் குறித்தும் கேலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கண்டனம் தெரிவித்தார். மேலும் தன்னுடைய பிரேமம் படத்தில் தான் எப்படி அண்டை மாநிலத்தவரைக் காட்டியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ரோஹித் ஷெட்டி தமிழர்களை இழிவு செய்யும் விதமாக நடந்துகொள்ள வில்லை என்று நம்புவதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.