திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (19:40 IST)

முடிஞ்சா என் கூட ரேஸ் வர ரெடியா? வாசனை வம்பிழுத்த பைக் ரேசர் அப்துல்லா அலிசா..!

டிடிஎப் வாசனுக்கு பைக்கை வைத்து சீன் போடத் தான் தெரியும் என்றும் ரேஸ் செய்ய முடியாது என்றும் முடிந்தால் என் கூட ரேசுக்கு வரியா என பிரபல பெண் பைக் ரேசர் அப்துல்லா அலிசா சவால் விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிஎஃப் வாசன் ஒரு பைக் பிரியர் என்பதும், அவர் பைக்கை வைத்து சாகசங்கள் செய்து வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அவை வைரலானது என்பது தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு தொழில் முறை பைக் ரேசர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தொழில்முறை பைக் ரேசரான அப்துல்லா அலிசா பல ரேஸ்களில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் அவர் தற்போது பாஜகவில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி அஜித்தும் அவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிடிஎப் வாசன் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அதிரடியாக ஒரு சவால் விடுத்துள்ளார். டிடிஎப் வாசனுக்கு பைக்க வெச்சு சீன் போட தான் தெரியும், முடிந்தால் என்னுடன் பைக் ரேசுக்கு வரச்சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ளார். அவரது சவாலை டிடிஎப் வாசன் ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by siva