பெயரை மாற்றிக் கொண்ட ஆலியா பட்!
இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.
பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஆலியா பட் மீண்டும் இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆலியா பட், தன்னுடைய பெயரை ஆலியா பட் கபூர் என மாற்றிகொண்டதாக அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளார்.